Friday, November 7, 2014

தமிழகத்தில் பால்விலை உயர்வு, சர்க்கரை விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு பெரியார் அண்ணா திராவிட கழகம் கடும் கண்டனம்

தமிழகத்தில் பால்விலை உயர்வு, சர்க்கரை விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகளால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் இவ்விலை உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெறவேண்டுமென பெரியார் அண்ணா திராவிட கழகம் சார்பில் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 5 பேரின் தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்குமாறும் நிரபராதி தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் பெரியார் அண்ணா திராவிட கழகம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.